அதிமுக பொதுக்குழு updates.. ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே ஆலோசனை.
அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் 16 ஸ்கேனர்களுடன் கூடிய அதிநவீன நுழைவாயில் அமைப்பு.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு ஆர்.எஃப்.ஐ.டி தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன அடையாள அட்டைகள்.
அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொதுக்குழுவில் அனுமதி.
போலி அடையாள அட்டை தயாரித்து கடந்தமுறை பலர் பொதுக்குழுவிற்கு வந்ததால் அதை தடுக்க இந்த ஏற்பாடு.
நாளை அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே ஆலோசனை.
சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஓபிஎஸ் உடன் ஆலோசனை.