அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியளிக்கிறது - வைத்திலிங்கம், ஓபிஎஸ் தரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பிய கடிதம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஆலோசனை!
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பியுள்ள கடிதம் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த கடிதத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு.
நடுநிலையை தவறவிட்டு, எடப்பாடி பழனிசாமியின் முகவராகவே அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் செயல்பட்டிருக்கிறார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் செயல்படவில்லை”
- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனைக்குப் பின் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி!
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரிமை, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது;
நடுநிலை தவறி ஒருசிலரின் கைப்பாவையாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் செயல்பட்டுள்ளார்"
- ஆலோசனைக்குப் பின் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி!
தமிழ்மகன் உசேனின் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம்”
- ஆலோசனைக்குப் பின் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி!
--
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
பொதுக்குழு உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் கடிதத்தை நாளை காலை டெல்லி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்!