இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் - ஓபிஎஸ் அதிரடி. ஆமா எந்த கட்சிக்கு? முழு விவரம்.
அதிமுகவிலிருந்து 10 பேரை நீக்குவதாக OPS அறிவிப்பு. இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கம் நியமனம்.
கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை துணை ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம்.
மேலும் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட 10 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் என்றும் ஓ.பி.எஸ் அறிக்கை.
OPS அவர்களே கட்சியில் இல்லாதபோது எப்படி இது எல்லாம் சடத்தியம். மொத்த பவரும் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உள்ளது என்பது தமிழ்நாடே அறியும்.
நேற்று, அதிமுக தலைமை அலுவலகத்தை சேதப்படுத்திய ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்ட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போலீசில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.