தான் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில்.. எடப்பாடி பழனிசாமியை வன்மையாக சாடிய பன்னீர்செல்வம். பதிலடி தரும் தொண்டர்கள்.
தான் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான்,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. விரைவில் அவை தொடங்கப்படும்!
இது பன்னீர்செல்வத்தின் கருத்து.
அதற்கு தொண்டர்களின் பதிலடி: இவரையும்,பிஜேபியையும் இன்னும் நம்புகிறீர்கள்.இனிமேலாவது புகழேந்தி போன்றவர்களின் தூண்டுதலை கேட்காமல் சுயபுத்தியில் முடிவெடுத்து கட்சியினரை நம்பி மாற்றுத்தரப்புடன் இணக்கமான பேச்சு வார்த்தை நடத்தி விட்டுக்கொடுத்து தகுந்த பதவி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஒன்றுபட வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அந்த தொகுதியில் ஒருவரை நிற்க செய்து வெற்றி பெற செய்யுங்கள்! உங்கள் ஆளுமை நிருபணம் ஆகும்! பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியிலும் வாக்கு வலிமை கட்சிகள் எதுவம் உடன் இல்லாத நிலையிலும் இபிஎஸ் வாங்கிய வாக்குகள் நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது!
ஈரோடில் இரட்டை இலை டெபாசிட் இழக்கவேண்டும் என்ற உங்கள் கும்பலின் ஆசை நிறைவேறவில்லை என டென்ஷனாகி புலம்புகிறீர்கள்.இனி ஒன்றும் ஆகப் போவதில்லை.புகழேந்தி,மருது தினசரி கேவலமாக திட்டிக்கொண்டே பிரஷர் கூடட்டும்.ஈபிஎஸ் தலைமையில் அதிமுக இன்னும் வேகமெடுப்பதை பார்க்கத்தான் போகிறீர்கள்.
Latest Tweet:
தான் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான், pic.twitter.com/VbYNKR74OC
— O Panneerselvam (@OfficeOfOPS) March 3, 2023