நீட் விஷயத்தில் தமிழ்நாடு அரசு தாமதம் காட்டக் கூடாது - அன்புமணி ராமதாஸ். முழு விவரம்.
நீட் விஷயத்தில் தமிழ்நாடு அரசு தாமதம் காட்டக் கூடாது.
முதலமைச்சர் உடனடியாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நீட்விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் எந்தத் துயரம் நடந்து விடக் கூடாது என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்தத் துயரம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நிகழ்ந்திருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்ற மாணவர், மருத்துவப் படிப்புக்கான NEET நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.