நல்லது பண்ணுங்க நியாயமா பண்ணுங்க நான் உங்களோட இருப்பேன். அன்புமணி ராமதாஸ் பேட்டி..
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற என்.எல்.சி. நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பின்றி வருகையால் பரபரப்பு.
அன்புமணி ராமதாஸ் வருகையை தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் வேல்முருகன், சபா.ராஜேந்திரன், அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
LC நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு தேவையில்லை; கடைசியாக 1989ல் அங்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுத்தார்கள். ஆனால், இப்போது வரை நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை கொடுக்கவில்லை.
கரிவெட்டி, கீழ் வளையமாதேவி, மேல் வளையமாதேவி ஆகிய 3 கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகின்றன
அதிகாரிகள் அளவில் விவாதித்து முடிவெடுப்போம் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்
சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் தலைமையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை வைத்துள்ளோம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
பாமகவினர் கருத்து: நீங்கள் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கூட்டம் நடத்தலாம் எங்கள் தலைவர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணிராமதாஸ் அவர்களை மீறி கடலூர் மாவட்டத்தில் ஒரு கைப்பிடி மண்ணை கூட என்எல்சி நிறுவனத்திற்கு நீங்கள் எடுத்து தர முடியாது.