சூடுபிடிக்கும் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம். எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை ஆதரவு. வீடியோ வைரல்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்தை பாஜக எதிர்ப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
--
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிகாரிகள் மேல் தவறில்லை. அரசு சொன்னதை அதிகாரிகள் செய்துள்ளனர். தண்டிக்கப்பட வேண்டியது அன்றைய அரசாங்கமே தவிற அதிகாரிகள் அல்ல.
-கே.எஸ். அழகிரி.
“டிவி பார்த்து தெரிந்து கொண்டதாக எடப்பாடி கூறியதில் தவறில்லை”
“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்திய விதம் தவறானது. ஈபிஎஸ் கவனக்குறைவாக இருந்தார் என கூறுவதும் தவறு. ஈபிஎஸ் கூறிய கருத்தை ஆணையம் திரித்து கூறியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமியை விசாரிப்பது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. -திமுக எம்.பி கனிமொழி
--
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின்படி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து உள்துறை முடிவு செய்யும்.
-சட்ட அமைச்சர் ரகுபதி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழ்நாடு உள்துறை முடிவு..!!
Video:
"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ரஜினி கூறிய கருத்தில் தவறில்லை" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி#SunNews | #Rajinikanth pic.twitter.com/GDQi2KTHc3
— Sun News (@sunnewstamil) October 22, 2022