தமிழ்நாடு ரொம்ப மோசம்.. முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடுமையான விமர்சனம்.
நான் தமிழக ஆளுநராக 4 ஆண்டுகள் இருந்தேன். அங்கு மிகவும் மோசமாக இருந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் ஊழல் புகார்; மேலும் நான் பணியாற்றியதில் அந்த 4 ஆண்டு (2016 -2021) தான் மோசமானது எனவும் வேதனை.
தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40-50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது - பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
நான் கவர்னராக இருந்த பொழுது தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி எல்லாத்துறைகளிலும் கமிஷன் வாங்கி இருக்கிறார் தமிழக பல்கலை. துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை: மாஜி கவர்னர் குற்றச்சாட்டு.
--
நேற்று சொன்னதை இன்று செய்து முடித்த மு.க.ஸ்டாலின்!
அதிமுக அரசு தூத்துக்குடியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கை நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் அத்துமீறி செயல்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் சிட்டுக்குருவி போல மக்கள் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்பட்ட விவரங்களை, எடப்பாடி பழனிசாமி நேரடி வர்ணனை போல கேட்டுக் கொண்டு இருந்ததாகவும், ஆனால், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அப்படியொரு சம்பவமே எனக்குத் தெரியாது, நானும் உங்களை போல டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என்றும் அப்பட்டமாக பொய் சொன்னது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து, நேற்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், “குற்றவாளிகள் அனைவரும் கூண்டில் ஏற்றப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய 4 காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், 13 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.