பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் அதிகமாக பார்க்க தொடங்கியுள்ளனர்; பார்க்காதே பார்க்காதே என்று கூறி அனைவரையும் பார்க்க வைத்துள்ளனர் - கனிமொழி
பிபிசி ஆவணப்படத்தை தடை செய்த மோடி அரசு: துணிச்சலாக பெரிய ஸ்கிரீனில் வெளியிட்டு அசத்திய கேரளா மாணவர் சங்கம்.
குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் திரையிட இருந்த நிலையில் 144 தடை உத்தரவு அமல்
இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்றது போலீஸ்.
பாசிச பாஜக என்று திராவிட மாடல் நொட்டுவது உண்மையென்றால் பிபிசி குஜராத் ஆவணப்படத்தை தமிழகம் முழுக்க திமுக வெளியிட வேண்டும்..
திமுக திராவிட மாடலுக்கு திராணி இருக்கிறதா என்று பல நடுநிலைவாதிகள் கேள்வி.
பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை ஜனவரி 26 ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் சிலையின் கீழ் ஒன்றாக உட்கார்ந்து பார்த்ததற்காக DYFI மத்திய சென்னை மாவட்ட தோழர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 98வது வட்ட கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி ஆகியோர் காவல்துறையினரால் கைது.
பிபிசி ஆவணப்படத்தை பார்த்த சென்னையின் இளம் கவுன்சிலர் கைது செய்தி வந்ததில் இருந்து திமுகவினரே கொதித்து போயுள்ளனர். உண்மையான திமுக தொண்டரின் கருத்து:
கைது உண்மையெனில், கைதுக்கு கடும் கண்டனங்கள்..
இந்நேரம் திமுக இளைஞரணி இதனை முன்னெடுத்து பிபிசி யின் ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுக்க திரையிட்டிருக்கவேண்டும்.. கேரளா மற்றும் தெலுங்கானாவில் திரையிட ஆரம்பித்து விட்டார்கள்..
விரைவில் பாஜக மோடியின் கோர முகத்தை உலகம் அறியச் செய்வோம்.