கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.
Now:
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை; கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக, சோதனை நடைபெற்று வருவதாக தகவல். கோவையில் உக்கடம், குனியமுத்தூர் உள்பட 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Then: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு போல் வடக்கில் நடந்திருந்தால் ஒரு பெரும் மதக்கலவரமும், மாநில முழுக்க பதட்டமும், இஸ்லாமியர்கள் பலரும் கொல்லப்படிருப்பார்கள். ஆனால் தமிழகம் இந்த விசயத்தை பதட்டமே இல்லாமல் அமைதியா கடந்தது. அதை பொறுக்க முடியாமல்தான் சங்கிகள் விழுந்து புரண்டு கதறுகிறார்கள் என்று அரசியல் பிரமுகர்கள் கருத்து.
“பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்;
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார்”
- தமிழ்நாடு காவல்துறை.
“கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல” - சீமான்