LIVE: செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா : நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி சட்டையில் முதல்வர் மு.க ஸ்டாலின்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி பங்கேற்பு.
சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளம் வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் நேரு ஸ்டேடியம் வருகிறார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா இந்தியாவின் பன்முகதன்மையை காட்டும் விதமாக 8 மாநிலங்களின் பாரம்பரிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி தொடங்கியது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் சர்வதேச நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நிறைவடைந்தது. 186 நாடுகளின் கொடி அணிவகுப்பை முன்நின்று வழிநடத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் மாநில அளவிலான செஸ் போட்டி வெற்றியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.