9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு.
“ஜூன் மாத சென்னையில் ஒரே நாளில் 16 சென்டி மீட்டர் மழை - காலநிலை அவசரநிலைக்கு சாட்சி!”
கடும் வெப்பம் கொளுத்திய சென்னை மாநகரில் ஒரே நாளில் 16 சென்டி மீட்டர் அளவுக்கும் கூடுதலாக மழை பொழிந்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல் என்பது சராசரி வெப்பத்தை விட அதிகமாக வெப்பம் நிலவும் அளவை குறிப்பதாகும். கடந்த 150 ஆண்டுகளில் புவியின் மேற்பரப்பு வெப்ப நிலை சராசரியாக 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. அது 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் செல்லக்கூடாது என்பதே அறிவியலாளர்களின் எச்சரிக்கை ஆகும்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அது தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் அதிகமாக சென்றுவிட்டது!
நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றின் மிதமிஞ்சிய பயன்பாடு மற்றும் காடுகள் அழிப்பின் காரணமாக வெப்பம் அதிகரிக்கிறது. அந்த அதிகரிப்பில் 90% அளவை கடல்கள் உறிஞ்சுகின்றன. தற்போது கடல்களின் உறிஞ்சும் உச்ச அளவும் கடந்துவிட்டதால் - இனி முழு வெப்பமும் நிலப்பரப்பை தாக்கும் என கணிக்கப்படுகிறது.
இந்த மாதத்தில் அரபிக்கடல் புயல் வடமேற்கு இந்தியாவையும் பாகிஸ்தானையும் கடுமையாக தாக்கியுள்ள நிலையில், வழக்கத்தில் இல்லாத மழை வடதமிழ்நாட்டை தாக்கியுள்ளது.
மனித குலத்தின் எதிர்காலம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதிலும், அதனை எதிர்கொள்வதிலும் தான் இருக்கிறது. ஆனால், அதற்கு தமிழ்நாடும் இந்தியாவும் இன்னும் முன்வரவில்லை. மக்களும் பேராபத்தை இன்னமும் உணரவில்லை!
-அருள் ரத்தினம்.
இந்த செய்தியை படித்தவுடன் பகிரவேண்டும் என்று தோன்றியது.