சென்னை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.
Latest Update:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருகிறது -இந்திய வானிலை ஆய்வு மையம்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
இராணிப்பேட்டை,வேலூரில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுரை!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து,சென்னைக்கு கிழக்கே 160 கீ.மீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!