டிசம்பர் 8, 9 தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் குறைந்துள்ளது - வானிலை ஆய்வு மையம்.
வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 700 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது; வேகம் குறைந்து கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது
மேற்கு வட மேற்கில் நகர்ந்து இது புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 700 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது புயலாக வலுவடைந்து, புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே சனிக்கிழமை அதிகாலை கரையை கடக்கக்கூடும்
-வானிலை ஆய்வு மையம்
அடுத்த 48-60 மணி நேரத்தில் மகாபலிபுரம் மற்றும் நெல்லூர் இடையே Mandous புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக, டிசம்பர் 9ஆம் தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.