செஸ் தீமில் சென்னை நேப்பியர் பாலம். போட்டோஸ் வைரல்.
செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு செஸ் போர்டாக மாறிய நேப்பியர் பாலம்.
தமிழ்நாட்டில் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி. இந்தப் போட்டியைக் கோலாகலமாகக் கொண்டாடும்விதமாக சென்னை நேப்பியர் பாலம் செஸ் கட்டங்களாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 வரையிலும் நடைபெற உள்ள 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.