செஸ் ஒலிம்பியாட் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், ஜோதி அணைக்கப்பட்டது. முதல்வர் உரை. பல சுவாரசிய சம்பவங்கள் அப்டேட்.
அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது. அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன். மிக குறுகிய காலத்தில் 4 மாதத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் - வெளிநாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
உலகில் இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடர்களில் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக நடந்துள்ளது - சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் பேச்சு
செஸ் ஒலிம்பியாட் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் FIDE கொடி இறக்கப்பட்டது
இந்த கொடி அடுத்து செஸ் ஒலிம்பியாட் நடக்க உள்ள ஹங்கேரி நாட்டிடம் வழங்கப்படும்.