இந்தியாவுக்கு முதல் பதக்கம் – பளுதூக்கும் போட்டியில் சங்கேத் மகாதேவுக்கு வெள்ளி.
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் எனது மகன் முதல் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது பெருமையளிப்பதாக உள்ளது என்று, மகாராஷ்டிராவில் தேனீர் கடை நடத்தி வரும் #SanketSargar-வின் தந்தை மகாதேவ் சர்கார் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த்விளையாட்டுகள்2022 ஆடவருக்கான 55 கிலோ பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் சங்கேத் சர்காருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பளுதூக்கும் வீரர் சங்கேத் சர்கார், ஆண்களுக்கான 55 கிலோ பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு பேசுகையில் “மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஆனாலும் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.”