இப்படி ஒரு தருணத்திற்காக என்னால் ஆயிரக்கணக்கான மைல் தூரம் நடக்க முடியும் - ராகுல் காந்தி.

Congress rahul gandhi video viral

இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டில் இன்று நடைபயணம் மேற்கொண்டார். மோடியின் கூட்டத்தை நெருங்க-கூட அஞ்சும் இந்த குழந்தைகள்தான் தலைவர் ராகுல் காந்தி மார்பில் அன்பாக சாய்கின்றனர் என்று காங்கிரஸ் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மக்களுடன் உரையாடும் போது, பாரத்ஜோடோ யாத்திரையின் போது கேரள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள்பிரச்சினைகளை முன்வைத்தபோது திரு. ராகுல் காந்தி அவர்களின் பதில்:

“நீங்கள் எழுப்பியதில் பல சிக்கல்கள் & பிரசனைகள் உள்ளன இந்தப் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்று உறுதி அளிக்கின்றேன்” என்றார்.

கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை பெரும் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்கிறது அரசு.ஆனால் அதே சமயம் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கடன்களை திரும்ப கட்டவில்லை எனில் அவர்களை கடன்கார்கள் என்று முத்திரை பதித்து சிறையில் அடைக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

Video:

Related Posts

View all