நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் ஒற்றைத்தலைமை பிரச்னை.. வைத்தியலிங்கத்தை விளாசிய சி.வி.சண்முகம்..!

Cv Shanumugam Reply To Ops Team

அதிமுக அவைத்தலைவர் தேர்வு செல்லாது என்று வைத்திலிங்கம் கூறியது தவறு.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று விதி இல்லை.

ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது அதிமுகவின் விதி.

Cv Shanumugam Reply To Ops Team

மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டால் பொதுக்குழுவை கூட்டலாம்.

வைத்தியலிங்கம் தேவையற்ற வார்த்தைகளை ரவுடித்தனமாக பேசியுள்ளார்.

நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு, ஓ.பி.எஸ் கையெழுத்தோடு அழைப்பு கொடுக்கப்பட்டது. தான் கையெழுத்தே போடவில்லை என்கிறாரா? உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு பஞ்சாயத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை; தேர்தல் ஆணையத்திற்கு தான் உண்டு.

ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம், அதை ஏற்றுக்கொள்வோம்;

அவர் பொறுப்புகளை அறிவித்தால், அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவார் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை வழிமொழிகிறேன் என பன்னீர் செல்வமே மேடையில் சொன்னார்தானே?

நேற்று 23ம் தேதி வரை மட்டுமே OPS ஒருங்கிணைப்பாளராகவும், வைத்திலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

View all