அதிமுகவை சேர்த்து வைக்க இவர்களால் தான் முடியும் - அமமுக தலைவர் தினகரன் .
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை & ஜெயந்தி விழா நாளான இன்று, கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் சென்னை, திருச்சி மாவட்டங்களில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவர் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர்கள் இ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி ஆகியோரும் பங்கேற்பு.
பசும்பொன் தேவர் திருமகனாரின் 115 வது ஜெயந்தி விழா 66 ஆவது குருபூஜை விழா பசும்பொன் தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் உள்ள தேவர் திருமகனார் திருவுருவசிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பசும்பொன் தேவர் திருமகனார் நினைவிடத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நாளான இன்று, அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவாக, “10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசம்” வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
Video:
#Watch | தேவர் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்#SunNews | #UdhayanidhiStalin | #DevarJayanti | @udhaystalin pic.twitter.com/Zpo0Hg9Uhr
— Sun News (@sunnewstamil) October 30, 2022