கட்டணமில்லாமல் பேருந்து பயணம்.. ‘அது உண்மையில்லை... வதந்தி' - அமைச்சர் விளக்கம்!

Dmk bus ladies ticket issue update

அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் தான் என்றாலும், தேவைப்படுகிறவர்கள் தானே உபயோகப்படுத்தி கொள்வார்கள். அதுபோல், கட்டணமில்லாமல் பயணிக்க தயங்கும் பெண்கள் கட்டணப் பேருந்தில் பயணிக்கலாம்.

ஹோட்டல் கல்லால நன்கொடை கேட்டு ஒரு கண்ணாடி பாக்ஸ் இருக்கும். அந்த மாதிரி ஒரு பாக்ஸை பஸ்ல வைச்சுடலாம்..கட்டணமில்லாமல் பயணம் செய்ய விரும்பாத மகளிர் அதுல காச போட்டுட்டு போயிடலாம்னு சொல்லிட்டா பிரச்னைகள் மிச்சம்.. ஒரு வாரத்துக்கு சில ஆயிரம் போக்குவரத்துத்துறைக்கும் கிடைக்கலாம்.

இதுபோன்ற கருத்துக்களுக்கு எல்லாம் காரணம், சமீபத்தில் ஒரு பாடி அரசு பேருந்தில் ஏறி பெண்களுக்கு இலவசம் என்று அறிந்தும் காசு கொடுக்கிறேன் டிக்கெட் கொடு என்று பிரச்சனை செய்ததால். பின்னர் அந்த பாடி அதிமுகவினர் தூண்டுதலின் பேரில் செய்யப்பட்டிருக்கலாம் என்று அவர் மீது வழக்குபோடப்பட்டது. அவர் அதிமுகவை சேர்ந்தவர் தான்.

இது எல்லாம் தெரியாததற்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் திமுகவை கிழித்து தொங்கவிட ஆரம்பித்தனர். காரணம் ஓசில தானே போறீங்க என்று அமைச்சர் பொன்முடி பேசிய காணொளி வைரல் ஆனதை முன்னிட்டு இது பெரிய சர்ச்சையை வெடித்தது.

தற்போது அதுக்கெல்லாம் போக்குவரத்துக்கு அமைச்சரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related Posts

View all