#தமிழ்நாடுபட்ஜெட்2023 | தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத்தலைவிகளுக்கு, வரும் செப்டம்பர் 15 முதல் ₹1000 உரிமைத்தொகை வழங்கப்படும்

Dmk tn budget update

தமிழ்நாடு 2023-24 நிதிநிலை அறிக்கை - அறிவிப்புகள்:

தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் ரூ.10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத்திருவிழா & இலக்கிய திருவிழா நடத்தப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்.

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை

20 லட்சம் ரூபாயில் இருந்து இருமடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்திட ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூபாய் 1500 ஆகவும், கடுமையான பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூபாய் 2000 ஆகவும் உயர்த்தப்படும்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தந்தை பெரியார் வன விலங்கு சரணாலயம்.

-—-

ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.

வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல்,தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

- Annamalai Tweet

தமிழ்நாடு பட்ஜெட் 2023 அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் - முக்கிய அம்சங்கள்:

Related Posts

View all