இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரௌபதி முர்மு பொறுப்பேற்றார்.
![Draupathi murmu oath as president](/images/2022/07/25/draupathi-murmu-oath-president.jpeg)
நம் இந்திய திருநாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றுகொண்டார் திருமதி.திரௌபதி முர்மு.
அவர் பேசியது: ஏழை வீட்டில் பிறந்து, சாதாரண கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய நான் குடியரசுத் தலைவராக முடியும் என்பது ஜனநாயகத்தின் சக்தி.
சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கு ஊறு ஏற்படாமல் கட்டிக் காக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்கள் தனது முதல் உரையில் இன்று,18ஆம் நூற்றாண்டில் நமது நாட்டின் விடுதலைக்காகப் போராடிய சிவகங்கை அரசி, ராணி வேலு நாச்சியாரின் வீரத்தை நினைவு கூர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை மீண்டும் ஒருமுறை நாடறியச் செய்தார்.
இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு பல மாநிலத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து.