தமிழ்நாடு அரசு முதலிடம் பெற்று சாதனை. குடியரசு தலைவர் கையில் விருதை பெற்றுக்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு.
உயிர் நீர் இயக்க திட்ட செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட முதல் மாநிலத்திற்கான விருதினை தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு வழங்கி கெளரவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு 60% அளவிற்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கிய தமிழக அரசுக்கு முதல் பரிசு; குடியரசு தலைவரிடம் விருதைப் பெற்றார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அந்த விடியோதான் தற்போது இணையத்தில் வைராலாகியுள்ளது.
மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் இந்தியாவில் தூய்மையாக இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு மூன்றாவது பரிசினை வழங்கிட தமிழ்நாடு அரசின் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முதன்மைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.