ஆஸ்கர் வென்ற யானைகள் பற்றிய ஆவண குறும்படத்தின் இயக்குநருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆஸ்கார் விருது பெற்ற “தி எலிஃபன்ட் விஸ்பர்ஸ்” ஆவணப் படத்தின் இயக்குநர் செல்வி. கார்த்திகி கொன்சால்வ்ஸ் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலை – தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
ஆஸ்கர் விருது வென்ற, ‘The Elephant Whisperers’ ஆவண குறும்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வேஸ்-க்கு ₹1 கோடி ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஒஸ்கார் விருதுகளை வென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘‘தி எலிபென்ட் விஸ்பர்ஸ்’’ என்ற குறும்படத்தையும்,நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்ற ‘‘RRR’’ திரைப்படத்தையும் இந்திய நாடாளுமன்றத்தில் திரையிடவுள்ளதாக, இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
முதுமலை முகாமில் உள்ள குட்டி யானைகள், அதன் பராமரிப்பாளர்களுக்கும் இடையே உள்ள உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, ‘தி எலிபென்ட் விஸ்பர்ஸ்’ என்ற ஆவண குறும்படம், ‘ஆஸ்கர்’ விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.