டி20 உலகக் கோப்பை 2022 சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது இங்கிலாந்து அணி!
தமிழ் ரசிகர்களால் சுட்டி குழந்தை என்று அழைக்கப்படும் சாம் குர்ரான் தான் இன்றைய ஹீரோ. தொடர் நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்று இங்கிலாந்து கோப்பை ஜெயிக்க காரணமாக இருந்தார்.
சிறப்பாகவும், சிக்கனமாகவும் பந்துவீசுவது என்பது உண்மையில் பாராட்டதக்கதே..😎
4 ஓவர்கள் 12 ரன்கள் 3 விக்கெட்டுக்கள்.
138 ரன்கள் இலக்கை 19வது ஓவரில் எட்டியது இங்கிலாந்து. 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
137 ரன்னையே அவன் கடைசி ஓவர் வரைக்கும் கொண்டு வந்துட்டான். 168 ரன் எடுத்தும் 16வது ஓவர்லியே தோத்துட்டு பாகிஸ்தான் ஜெயிக்கலனு சந்தோசப்படுறதுக்கு பெயர் என்ன தெரியுமா. இங்கு இணையவாசிகள் பலர் அதை தான் செய்து கொண்டிருக்கின்றனர். 137ஐ மட்டும் வைத்துக்கொண்டு பாகிஸ்தான் காட்டிய போராட்டம் இருக்கே, ஒவ்வொரு அணியும் பாராட்ட, பர்த்துப் பழக வேண்டியது.
பென் ஸ்டோக்ஸ் எனும் ‘Finisher’ 🔥
2016 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் தோல்விக்குக் காரணமாக இருந்த ஸ்டோக்ஸ் இப்போது அதற்கு ஈடாக ஒரு டி20 உலகக்கோப்பையையே வென்று கொடுத்துவிட்டார். 20 ஓவர் ஆட்டங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற ஒதுக்கப்பட்ட ஸ்டோக்ஸ் இப்பொழுது மீண்டு வந்து உலக கோப்பை வாங்கி தந்துள்ளார்.