சூடு பிடிக்கும் அதிமுக ஒற்றைத்தலைமை பிரச்னை. அதிமுக பொதுக்குழு வழக்கு EPS தரப்பு முறையீடு. முழு விவரம்.
அதிமுக பொதுக்குழு வழக்கு - உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையீடு செய்திருக்கிறது.
பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சி தொடர்புடையது என்று இபிஎஸ் தரப்பு மனு.
23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும், வேறு ஏதும் தீர்மானம் கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இவ்விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்பு ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.