அதிமுக ஆட்சிக்கு வருவதை எவராலும் தடை போட முடியாது - EPS அதிரடி.
அதிமுக ஆட்சிக்கு வருவதை எவராலும் தடை போட முடியாது” - நாமக்கல் பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக 3-ஆக உடைந்துள்ளது என கூறுகிறார்; அதிமுக ஒன்றாகதான் உள்ளது. உடைக்க வேண்டும் என ஸ்டாலின் முயற்சி செய்தால் அது தோல்வியில் தான் முடியும்.
அதிமுக பிளவுபட்டுள்ளது எனக்கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இந்தக் பொதுக்கூட்டத்தை ‘டிவியில் நேரலை’யில் பார்த்துக்கொண்டு இருப்பீர்கள் என கருதுகிறேன். அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும்; இந்த கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிள்ளையார் சுழி. காற்றை தடை செய்ய முடியாதது போல, அதிமுக ஆட்சிக்கு வருவதையும் தடுக்க முடியாது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான். இனி இணைப்புக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.அதிமுக ஒன்றாக இருப்பதற்கு இந்த நாமக்கல் பொதுக்கூட்டம் சாட்சியளித்துக்கொண்டு இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு.
எடப்பாடி பழனிசாமி நேரடியாக முதலமைச்சராக வந்துவிடவில்லை; கட்சியில் பல்வேறு பதவிகளைப் பெற்று முதல்வராக வந்துள்ளார் - நாமக்கல்லில் அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு .
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி: எடப்பாடி பழனிசாமி உறுதி. EPS அணி,OPS அணி, சசிகலா அணி மற்றும் தினகரன் அணி எல்லோரும் ஒண்ணா சேர்வார்கள் போல என்று எதிர்க்கட்சியினர் நக்கல்.