இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது - அதிமுக பொதுக்குழு தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை ஒன்றரை கோடி கழகத் தொண்டர்கள் சார்பாக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
விரைவில் பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைபெறும்; அதில் தொண்டர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்று எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
-முன்னாள் அமைச்சர் செம்மலை.
-- நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ரூ. 1.10 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு
தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
அறப்போர் இயக்கத்தின் செயல் தமக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி மனு
எடப்பாடி பழனிசாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை - அறப்போர் இயக்கம் வாதம்.
சற்று முன்: வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவச் சிலைக்கு செப்.5ம் தேதி அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு