அதிமுக பொருளாளர் விவகாரம்: வங்கிகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு மாற்றி மாற்றி பரபரப்பு கடிதம்.
அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் தொடர்பாக கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி மேலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!
அதிமுக வரவு, செலவு கணக்குகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் எனவும் கடிதத்தில் தகவல்!
நானே அதிமுக பொருளாளர்; வேறு யாரையும் அதிமுக வரவு, செலவுகளை கையாள அனுமதிக்க கூடாது - வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்.
ரூ. 244. 80 லட்சம் நிலை வைப்புத் தொகை, அதிமுக கணக்கில் உள்ளது; கட்சியின் வரவு செலவு கணக்கை ஜூலை 11ம் தேதி தாக்கல் செய்திருந்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.