ஈரோடு இடைத்தேர்தலில் மட்டுமல்ல அண்ணாமலை, தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. Full Report.
ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் வேட்பாளராக களமிறங்குகிறார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சூசக தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
- இடைத்தேர்தல் என்பது கட்சிகள் பலம் காட்டும் தேர்தல் அல்ல.
- கூட்டணிக்கென்று மரபு, தர்மம் உள்ளது. அதன்படி நடந்து கொள்ள
வேண்டும். கூட்டணி தர்மப்படி நடந்து கொண்டால்தான் அனைவருக்கும் மதிப்பு இருக்கும்.
- கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க. தான்.
- ஈரோட்டில் அதிமுகவினர் பலர் இதற்கு முன்பாக வெற்றி பெற்றுள்ளனர். ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் உள்ளனர்.
போட்டியிடக்கூடிய வேட்பாளர் பண பலம் மற்றும் அதிகார பலத்தை முறியடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தலில் மட்டுமல்ல அண்ணாமலை, தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. அண்ணாமலைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு குறும்படம் காண்பிக்க வேண்டும்.. விமான கதை போல என்று பாஜக முன்னாள் காயத்ரி ரகுராம் கடுமையான விமர்சனம்.
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு.இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு.