ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரே பூமி, ஒரே குடும்பம். ஒரே எதிர்காலம்’ என்ற முழக்கத்துடன் நாளை ஜி20 தலைமையை இந்தியா ஏற்கிறது. சமீபத்தில் இந்தோனேசியாவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் அதிகாரப்பூர்வமாக ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல். ஜி20 தலைமை பொறுப்பில் இந்தியா! தஞ்சை பெரிய கோவில் உட்பட 100 நினைவுச் சின்னங்களுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம்!
ஜி20 மாநாட்டில் நம் பாரத பிரதமர் மோடி அவர்களை தேடி சென்று வரவேற்ற அமெரிக்கா அதிபர் ஜோ பைடன். ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்கும் நம் பிரதமரால் இந்தியாவிற்கே கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று பாஜகவினர் உற்சாகம்.
இந்தியா ஜி 20 மையப்பொருள் என்பது ‘அனைவரையும் உட்படுத்தியதாக லட்சியமிக்கதாக செயல்பாடுகள் சார்ந்ததாக உறுதியானதாக இருக்கும்.
புனரமைத்தல் நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையாக" இந்தியாவின் ஜி20 தலைமையை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைவோம் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் தாயகம் #ஜி20ஐ இன்று முதல் தலைமையேற்று வழி நடத்துகிறது இந்தியா.
உலகளாவிய மாற்றத்திற்கான ஒரு மாபெரும் நிகழ்வாக இந்த நிகழ்வை மாற்றிக் காட்ட சபதம் ஏற்று இருக்கும் பாரதப் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம்.
Video:
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா..! pic.twitter.com/xffBCsKtaJ
— Viknesh Karuppiah (@BJPViknesh) November 16, 2022