இசைஞானி இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக குடியரசுத்தலைவரால் நியமனம்.
இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி. ஆக தேர்வு.
மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.
இசை இனி நாடாளுமன்றத்திலும் ஒலிக்கட்டும். நல்வாழ்த்துகள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் (இயக்குநர் ராஜமவுலியின் தந்தை), சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள் ஆகின்றனர்.