ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ‘செல்லோ ஷோ’ என்ற குஜராத்தி படம் பரிந்துரை!
➥ஆஸ்கார் விருதுக்கு செல்லும் குஜராத் திரைப்படம்
➥குஜராத்தி திரைப்படமான “செல்லோ ஷோ” 2023-ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுகளுக்கான இந்திய மொழி படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது
➥இந்திய திரைப்பட கூட்டமைப்பு தகவல்
RRR படம் ஆஸ்கார் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் செல்லவில்லை. சென்றிருந்தால் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் OTTயில் ரிலீஸ் ஆன பின் பல வெளிநாட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழை பொறுத்தவரை இரவின் நிழல் ஆஸ்க்கார் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அனால் அதுவும் நிராகரிக்கப்பட்டது. அதைப்பற்றி பார்த்திபன் கருத்து:
இரவின் நிழல் படம் ஆஸ்கருக்கு தேர்வாகாததில் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்ல"
“ஆஸ்கருக்கு “இரவின் நிழல்” படத்தை அனுப்ப தனிப்பட்ட முறையில் அனைத்து முயற்சியையும் தொடங்கிவிட்டேன்”.
சமீபத்தில் டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது, சிறந்த இயக்குநருக்கான ஜூரி விருது இயக்குநர் பார்த்திபனுக்கும், சிறந்த அறிமுக நடிகைக்கான விருது சினேகா குமாருக்கும் என ‘இரவின் நிழல்’ திரைப்படம் மொத்தம் 4 விருதுகளைப் பெற்றுள்ளது.