மீண்டும் ஆரம்பமானது இந்தியன் 2.. இந்த தடவ மிஸ் ஆக வாய்ப்பே இல்ல.. தயாரிப்பாளர் அப்படி. மிரட்டல் போஸ்டர் வைரல்.
![Indian 2 movie resume](/images/2022/08/23/indian-2-movie-resume.jpg)
கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகி பாதியில் நிறுத்தப்பட்ட படம் இந்தியன் 2. இந்த படம் சரியாக தேர்தல் சமயத்தில் அதற்கு கொஞ்சம் முன்னர் படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.
ஏராளமான சிக்கல்கள் தாண்டி படக்குழு திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி வந்தது. படப்பிடிப்பில் நடந்த ஒரு விபத்து, அந்த சமயத்தில் படத்தில் பணியாற்றிய இருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. அதனால் அந்த படப்பிடிப்பு மொத்தமாக நிறுத்தப்பட்டது.
![Indian 2 movie resume](/images/2022/08/23/indian-2-kamal-is-back-1.jpg)
கமலும் தேர்தல் வேலைகளை பிஸியாகி விட்டார். அதற்குப்பின் மீண்டும் படம் நடிக்க தயாரான கமல் விக்ரம் படத்தை சிறிது காலத்தில் நடித்து முடித்தார். படமும் ரிலீஸ் ஆகி கமல் படத்திலேயே இது தான் அதிக வசூல் செய்த படம் என்ற அங்கீகாரம் பெற்றது.
பின்னர் இப்போது இந்தியன் 2 படத்தை தூசி தேடியுள்ளார் கமல். சங்கர் அந்த சம்பவத்திற்கு பிறகு ராம்சரணை வைத்து RC15 படத்தை தெலுங்கில் இயக்க ஆரம்பித்துவிட்டார். அந்த படமும் முடியும் தருவாயில் உள்ளது.
மீண்டும் இந்த படத்தை இப்போ லைக்காவுடன் சேர்ந்து தயாரிப்பது ரெட் ஜெயண்ட் movies உதயநிதி ஸ்டாலின். தொட்டதெல்லாம் ஹிட் ஆகி வரும் இந்த நேரத்தில் இந்த படமும் இனி பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![Indian 2 movie resume](/images/2022/08/23/indian-2-kamal-is-back-2.jpg)
Latest Poster:
![Indian 2 movie resume](/images/2022/08/23/indian-2-kamal-is-back.jpg)