ஆளுநர் ரவி மீது எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம். பல அரசியல் செய்திகள் சுட சுட. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒன்றிய அரசின் அனைத்து தேர்வுகளும் தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் நடக்கும் என அறிவியுங்கள்; அதை விட்டுவிட்டு தமிழுக்கு ஆபத்து என வாய்ப் பந்தல் போடாதீர்கள். நான் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை; நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் தரமாட்டேன் என குடியரசுத்தலைவர் கூறினால், ஒன்றிய அரசு அதை ஏற்குமா?
ஆளுநர் ரவி மீது எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்
--
“தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டே தமிழ்ப்பெருமை பேசுவதும், திருக்குறளை மேடைகளில் மோசமாக உச்சரிப்பதும், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி மதவாதியாக்க பார்ப்பதும் தான் சங்கித்வாவின் சதிகாரத் திட்டங்கள்”
- DMK ITwing செயலாளர் TRB ராஜா
--
வெட்கம்! வெட்கம்! மகாவெட்கம்!!!
சமஸ்கிருதத்தை வளர்க்க ரூ 643 கோடி செலவு செய்திருக்கிறது பாஜக அரசு. அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் அறிக்கையில் அனைத்தும் இந்தி. இந்தியைத் தவிர வேறில்லை. இவர்கள் தான் காசியில் தமிழ்ச் சங்கமம் கூட்டுகிறார்கள்.
- முரசொலி
--
“கூட்டுறவுத்துறையில் 6,500 புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 ‘உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் வெளியிடுவார்”
- கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி
--
Video:
“நான் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை; நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் தரமாட்டேன் என குடியரசுத்தலைவர் கூறினால், ஒன்றிய அரசு அதை ஏற்குமா?”
— Sun News (@sunnewstamil) November 21, 2022
- ஆளுநர் ரவி மீது எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்#SunNews | #RNRavi | @SuVe4Madurai pic.twitter.com/30bLk6rA1I