கலைஞரின் பேனா வடிவுச்சின்னம் அமைப்பது குறித்து பொது மக்களின் கருத்துக் கேட்பு கூட்டத்தில்... வீடியோ வைரல்.
‘கடற்கரையில் புதைக்கவிட்டதே தப்பு, கடலில் பேனா வைத்தால் ஒருநாள் வந்து நான் உடைக்கத்தான் போகிறேன்’
சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பேனா நினைவு சின்னம் நிறுவுவதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
அதற்கு பயங்கரமா எதிர்ப்பு எழுந்துள்ளது.
திமுகவினர் கருத்து: ஒற்றைப் பேனாவால் ஓராயிரம் சாதனைகள் செய்தவர் கலைஞர். ஒட்டுமொத்த சமூகத்தையே உயர்த்தி விட்டது அவரது பேனா…
ஆயிரம் ஆயிரம் சதிகளைத் தாண்டி வள்ளுவனுக்கே கடலுக்குள் சிலை வைத்த தலைவரின் பேனாவைத் தகர்க்க நினைக்கும் எவர் ஒருவரும் அதன் நிழலைக் கூட தொட முடியாது…
#கலைஞரின்_பேனா
கருவறையில் இருந்து கல்லறை வரைக்கும் வாழ வைத்தது.#கலைஞரின்பேனா வாளின் கூர்மையை விட பேனாவின் முனை சக்தி வாய்ந்தது வங்க கடலில் எங்கள் தலைவர் #கலைஞரின்பேனா அங்கம் பெறும்.
அது வெறும் பேனா இல்லை! தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்களை தட்டியெழுப்பிய பேனா!
அது பெரியாரின் கைத்தடி! அண்ணாவின் நுண்ணறிவு! கலைஞரின் கைவாள்! அவருடைய 14ம் வயதில் எழுத்துவதற்காக தலைகுனிந்த அந்த பேனா, இன்றுவரையில் எத்தனையோ தமிழர்களை தலைநிமிர வைத்துள்ளது!
Video:
'கடற்கரையில் புதைக்கவிட்டதே தப்பு, கடலில் பேனா வைத்தால் ஒருநாள் வந்து நான் உடைக்கத்தான் போகிறேன்'
— குமரேசன் வீராண்டி (@KumaresanVeera4) January 31, 2023
சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பேனா நினைவு சின்னம் நிறுவுவதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு pic.twitter.com/BGx9U8TYtA