பெரியார் சிலை குறித்து அவதூறு பேச்சு. பாண்டிச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணன் கைது.
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ‘கனல்’ கண்ணன் கைது.
புதுச்சேரியில் இருந்தவரை தமிழ்நாடு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென சும்மா இருந்தோரை உசுப்பேற்றி கலவரத்துக்கு தூண்டியதால் கைது.
சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார்.