அரசியலில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு உதாரணம், ஊக்கம் கனிமொழி. அவருடைய பிறந்தநாள் இன்று. முழு விவரம்.
இந்தியாவிலே அரசியல் நாகரீகம் தெரிந்த உன்னத தலைவர் மறைந்த Dr.கலைஞர் அவர்களின் பாசமான மகளும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய கனிமொழி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அப்பாவை போல எல்லோரையும் அரவணைக்கும் பண்பும், மாண்பும் தெரிந்தவர் என்று பத்திரிகையாளர்கள் வாழ்த்து.
பெண்ணிய கவிஞர், சமூகநீதி போராளி, தமிழ்நாட்டின் அரசியல் ஆளுமைகளில் முதன்மையானவர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று பல முகங்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொண்டர்கள் குறிப்பிடும்போது கலைஞரின் மொழி கனிமொழி என்று தான் கூறுவர்.
தந்தை பெரியாரைப் படித்து, தமிழினத் தலைவர் முத்தமிழறிஞரிடம் பயின்று திராவிடக் கொள்கைதனை உறுதியாய் உயர்த்திப் பிடித்து பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டைத் தலைநிமிரச் செய்யும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் என்று தொண்டர்கள் பெருமிதம்.
பிறந்தநாளில் அதிரடி:
தவறு செய்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் முதலமைச்சர்… அதே சமயம் தம்பி அண்ணாமலை மீது தன் கட்சி பெண்மணி கூறிய குற்றச்சாட்டுக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
- கனிமொழி
நம் மொழி - பண்பாடு - அரசியல்-வாழ்வியலின் அடையாளம் “தமிழ்நாடு”. அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்!