மாஸ்.. திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. தேர்வு!
திமுகவின் புதிய துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தோழர் கனிமொழி அவர்களுக்கு வாழ்த்துகள். பெரியாரின் கொள்கை வழி அரசியலாளராக இயங்கி வருபவரான தோழருக்கு இந்த பொறுப்பு அளித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. முதல்வர் முக.ஸ்டாலினும் மிக நீண்ட காலம் அதீத உழைப்பிற்கு பிறகு தான் தலைமை பதவிகளை பெற்றார். அதே போன்றுதான் திருமதி கனிமொழி கருணாநிதியும் மிக நீண்ட காலம் அதீத உழைப்பிற்கு பிறகு கழக துணை பொது செயலாளர் ஆகியிருக்கிறார்.
இதற்காகத்தான் பல பெண்கள் காத்திருந்தார். மதுவால் இளம் விதவைகள் அதிகமாகிவிட்டனர் என கடந்த ஆட்சியில் கவலை கொண்டிருந்த அவர், இந்த பதவியை பயன்படுத்தி முழு மதுவிலக்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கின்றனர்.
“அண்ணா, அப்பா இல்லாத இடத்திலே, நான் உங்களை வைத்து பார்க்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் மறைவிற்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் உருவாகும் என்று நம்முடைய பகைவர்கள் எண்ணியிருந்தார்கள். வெற்றிடத்தை ஆழிப்பேரலையாக நிரப்பி அவர்களின் கனவுகளை அழித்தவர் நம்முடைய கழகத் தலைவர். நீங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்திலும் உங்களோடு அணிவகுக்க தயாராக இருக்கிறேன். இந்த நாடே தலைவர் மு.க.ஸ்டாலின் வழி நடத்தலை எதிர்பார்க்கிறது” – பொதுக்குழுக் கூட்டத்தில் கனிமொழி | திமுக பொதுக்குழு கூட்டத்தில் கனிமொழி பேச்சு.
திமுக துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கனிமொழி எம்.பி.க்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து.
அவரின் வாழ்த்துச்செய்தி: திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகப் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர் #கனிமொழி அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.