என்ன சொல்கிறது கேரளா ஸ்டோரி.. பாஜக பிரமுகர் review.. கழுவி ஊதும் தமிழ் மக்கள். முழு விவரம்.

Kerala story movie controversy

நேற்றிரவு சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் #TheKeralaStory திரைப்படத்தை நண்பர்களுடன் பார்த்தேன். அங்கு பார்த்த காட்சிகள் என்னை மெய்சிலிர்க்க வைத்ததுடன், தமிழகத்தின் எதிர்காலத்தின் மீது ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

  1. படத்தில் ஒரு தருணத்தில் மதம் மாற்றப்பட்டு கற்பழிக்கப்பட்ட பெண் தன் கம்யூனிஸ்ட் தந்தையை பார்த்து “சிறுவயதில் இருந்து அந்நிய கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை எங்களுக்கு சொல்லிக்கொடுத்த நீங்கள், ஒரு முறையாவது நமது ஹிந்து மதம், கலாச்சாரம், பண்பாடு குறித்து சொல்லிக்கொடுத்து வளர்த்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதே அப்பா??” என நாக்கை பிடுங்குவது போல் கேட்ட போது, விண்ணை பிளக்கும் அளவிற்கு கரகோஷத்தால் திரையரங்கமே அதிர்ந்தது.
  2. படம் முடிந்த பிறகு அனைவரும் எழுந்து நின்று பலத்த கரகோஷங்களை எழுப்பினர் - Standing Ovation.

தமிழகத்தை பீடித்துள்ள போலி திராவிட பாஸிஸ்டுகளின் பிடியிலிருந்து தமிழர்கள் நிச்சயம் மீண்டு விடுவார்கள் போல. உண்மைகளை மட்டும் சமரசமின்றி உரக்க மக்களிடம் கொண்டு சென்றால் போதும். மாற்றம் தானாக நிகழும்.

மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். புதிய நம்பிக்கை பிறக்கிறது என்று பாஜகவின் முக்கிய பிரமுகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.

மக்கள் கருத்து: கலவரம், வன்முறை, மத இன வெறி அராஜகம் என்றாலே சங்கி மங்கி கோட்சே கும்பலுக்கு மகிழ்ச்சிதானே, நாட்டு மக்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க கூடாது வளர்ப்பு அப்படி.

30,000 பெண்களின் கண்ணீர் கதை என பொய் சொல்லி இறுதியாக 3 பெண்களின் கதை என பதுங்கிய இயக்குனருக்கு 3,000+ படுகொலைகளும் 1,000+ கற்பழிப்புகளும் நடந்த #குஜராத்_கதை தெரியுமா.? காரணமான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இன்றுவரை விடுதலையாகி கொண்டே இருக்கும் மர்மத்திற்கு காரணம் யார் தெரியுமா?

தி கேரளா ஸ்டோரி படத்தை அனைவருக்கும் இலவசமாக திரையிட வேண்டும் - பாத்திமா அலி, முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் தென்னிந்திய மண்டல ஒருங்கிணைப்பாளர்

Related Posts

View all