கார் வர சத்தம் கேக்குது ஜெயிலர் வந்துட்டார் போல.. இல்ல அவர் மனைவி தான் பெயில் வாங்க முக்காடு போட்டு வந்திருக்காங்க.. முழு விவரம்.
Why #முக்காடுலதா Trending 🤘
படம் :கோச்சடையான் படம் தயாரிப்பு :Media One பைனான்ஸ்: Ad Bureau Guarantor :லதா ரஜினிகாந்த்
வாங்கிய பணத்தை திரும்ப முழுசா கொடுக்கல. பேசிய படி படத்தோட வெளியீட்டு உரிமையை கொடுக்கல. படத்தை EROS கொடுத்துட்டு பணத்தை ஆட்டய போட்டுட்டாங்க என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
9 வருசமா நீதிமன்றம் போகாமல் வழக்கை சந்திக்காம ஏமாற்றிவிட்டு, பிடிவாரண்டு வந்த பிறகு லதா ரஜினிகாந்த் கோர்ட் படி ஏறி ஜாமீன் வாங்கி வந்து இருக்காங்க.
லதா ரஜினிகாந்த் கொடுத்த விளக்கம்: பெரிய செலிபிரிட்டியா இருக்காங்க, பணக்காரங்களா இருக்காங்க, மீடியா போனா பேரு கெட்டுடும்னு பயந்து, கேட்டத கொடுத்துவாங்கனு செய்றாங்க. அதுக்கு நாங்க துணை போக மாட்டோம். “ஏன் முக்காடு போட்டீங்க”-ன்னு கேட்ட கேள்விக்கு கூட நிதானமா தெளிவா பதில் சொல்லியிருக்காங்க.
லதா ரஜினிகாந்த் அவர்களின் பொறுமை, தெளிவு, எத்தகைய வன்ம கேள்விகள் எழுந்தினும் அதை அணுகுவதில் ஒரு நிதானம், தேவையில்லாத பேச்சை அழகாக தவிர்த்தல் என்று இந்த பிரஸ் மீட் முழுக்க சிக்ஸர்கள் தான் என்று ரஜினி ரசிகர்கள் பரவசம்.
Video:
வன்மம் நிறைந்த நோக்கத்தோடு தொடர்ந்து பரப்பி வரும் அவதூறுகளுக்கு விளக்கம் அளித்த அம்மா திருமதி.லதா ரஜினிகாந்த் அவர்கள்.#வாய்மையே_வெல்லும் pic.twitter.com/pj7J9M8AVF
— Sholinghur N Ravi (@SholinghurRavi) December 27, 2023