95 % வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி.... வீடியோ வைரல்.
மதுரை எய்ம்ஸ் கட்ட ரூ 1,264 கோடி பணமில்லை?
மருத்துவமனைகள் இல்லை மருந்துகள் இல்லை ஆக்சிசன் இல்லை தடுப்பூசிகள் இல்லை மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் இல்லை
ஆனால் “விஸ்த்தாரா” என்ற ஆடம்பரமான பாராளுமன்றத்திற்கும், மோடியின் வீட்டிற்கும் 13,500 கோடி ரூபாய் இருக்கிறது? என்கிற மக்களின் கேள்வி பாஜகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
--
உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை.
ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை.
அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம்.
--
‘மிஸ்டர் நட்டா, 95% பணிகள் முடிவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே?
வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்.
மதுரை எய்ம்ஸ் அமைக்கப்படுவதற்கான வேலைகள் 95 சதவிகிதம் முடிந்துவிட்டது… விரைவில் பிரதமர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைப்பார், என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா பேசியிருந்தார்
'மிஸ்டர் நட்டா, 95% பணிகள் முடிவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே?
— DON Updates (@DonUpdates_in) September 23, 2022
வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் @manickamtagore pic.twitter.com/nRZqI04xZs