நிர்வாணமாக்கி ஊர்வலம்; கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. என்ன நடக்குது இந்தியால. வெடிக்கும் அரசியல் போர்.
முதல்வர் பிரேன் சிங்கை உடனடியாக டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரி கனமழையில் மணிப்பூர் மக்கள் பேரணி.
மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்…. “கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…”
மணிப்பூரில் இரண்டு பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வருவதை காணும்பொழுது மனது ரணமாகிறது. இதெல்லாம் நியாயம் தான் என அந்த மனித மிருகங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருப்பது தான் அதிர்ச்சி கலந்த வேதனை. பிரதமர் மோடி அவர்கள் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடி 8 நிமிடங்கள் 25 வினாடிகளுக்கு பேசினார். அவருக்கு எதிர்கட்சியினரின் கேள்வி:
அதில் மணிப்பூர் குறித்து பேச 36 வினாடிகள் மட்டுமே கிடைத்ததா?
மணிப்பூரைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, ராஜஸ்தானையும் சத்தீஸ்கரையும் கேலி செய்கிறீர்களா?
சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆகிறது, இப்போதுதான் உங்களுக்குத் தெரிய வருகிறதா?
உண்மை என்னவென்றால், இந்தக் கொடூரச் செயலுக்கு வீடியோவில் காணும் அயோக்கியர்களைப் போலவே நீங்களும் பொறுப்பாளி.
இன்று இந்த நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் நிர்வாணமாக உணர்கிறார்கள் - யாரோ உடலை மட்டுமல்ல, ஆன்மாவையும் கிழிக்கிறார்கள் என்று தெரிகிறது.
வெட்கப்படுகிறேன் மோடி அவர்களே, நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.