கோவையில் பாதுகாப்பினை உறுதி செய்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. முழு விவரம்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை மற்றும் கீழ்காணுபவற்றை உடனடியாக செயல்படுத்த முதல்வர் உத்தரவு
கோவை மாநகரின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையங்கள் அமைக்க உத்தரவு. காவல்துறையில் ஒரு புதிய சிறப்புப் படை அமைக்க உத்தரவு. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு. மாநிலத்தின் உளவு பிரிவில் கூடுதல் காவல் அலுவலர்கள் நியமனம் செய்ய உத்தரவு.
கோவை உக்கடத்தில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு பரிந்துரை. கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.