மழைநீர் வடிகால் பணிகளை துல்லியமாக செய்து முடித்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் பொதுமக்கள்!

Mk stalin chennai rains

6மாத அவகாசத்தில் செய்யப்பட்ட இந்த மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலான இடங்களில் மிக சிறப்பாக பயனளித்து இருக்கின்றன. சுரங்க பாதைகளில் கூட மழை வெள்ளம் தேங்காத அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

சில இடங்களில் மட்டும் சிறிதளவு தேங்கியுள்ள நீரையும் அடுத்த மழையில் தேங்காத அளவு சரிசெய்வார்கள் என நம்புகிறேன் என்று பொதுமக்கள் கருத்து.

--

“ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ள நீரில் தத்தளிக்கிறது;

வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது. மழை நீரை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அதிகாரிகள்,அமைச்சர்கள் வந்து பார்வையிடவில்லை எனவும் மக்கள் குமுறுகின்றனர்”

-விஜயகாந்த்,தேமுதிக தலைவர்

--

சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.

--

எனது தலைமையிலான ஆட்சியில், 4 ஆண்டுகளில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 196 கி.மீ. நீள ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், 2015-ம் ஆண்டு நீர் தேங்கியிருந்த 306 இடங்கள், 2020-ஆம் ஆண்டில் 3-ஆக குறைக்கப்பட்டது.

-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

Related Posts

View all