சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம். எதற்கு? முழு விவரம்.
ஜி20 மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை ஒருநாள் பயணமாக டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2023ம் ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடக்க உள்ளது; நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவம் கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து நாளை டெல்லியில் மாண்புமிகு பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுகழக பொது செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்ற நிலையில், ஜி20 லோகோவுடன் இந்தியா முழுவதும் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உட்பட 100 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஜி20 லோகோவுடன் ஒளிர்கிறது, ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்கும் ஒரு வரலாற்று நாள்! உலகத்தின் கண்கள் நம்மீது இருப்பதால் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் தருணம்.
ஜி20 நாடுகளுக்கு தலைமை வகிப்பதன் மூலம், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் இந்தியா முன்னேற்றம் அடையும் : ஆவடியில் தென்மண்டல அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.