ஓய்வில்லை நமக்கு! முதலிடமே இலக்கு! - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நலமாக உள்ளேன், சிறிது நாட்களில் மக்கள் பணியை தொடர்வேன்; ஓய்வில்லை நமக்கு! முதலிடமே இலக்கு! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
லேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி கொஞ்சம் ஓய்வும் எடுக்க வேண்டியதாகிவிட்டது.
இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் அரசுப் பணிகளையும் கழகச் செயல்பாடுகளையும் வழக்கம்போலத் தொடர்ந்திட ஆயத்தமாக இருக்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் அந்த மடலில் குறிப்பிட்டிருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்று நேற்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.