அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒரு அமைச்சரை நீக்கவோ, சேர்க்கவோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரால்தான் முடியும். ஆளுநர் எப்படி நீக்க முடியும்? இந்த அறிக்கை தொடர்பாக வேறு வழியே இல்லாமல் நாளை நீதிமன்றத்தில் குட்டு வாங்குவார் ஆளுநர்
ஆளுநர் என்ற பதவிக்கான கௌரவத்தை காப்பாற்றாமல், பாஜகவின் அடிவருடியாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. அந்தப் பதவிக்கே அவர் தகுதி இல்லாதவர்" - டி.கே.எஸ். இளங்கோவன், திமுக.
--
“ஒருவர் அமைச்சரவையில் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது;
அரசியல் சட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்பட்டுள்ளார்;
நீதிமன்றத்துக்குச் சென்றால் ஆளுநர் ரவி மீண்டும் குட்டுப்படுவார்”
-காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை காட்டம்.
--
“ஆளுநர் என்ற பதவிக்கான கௌரவத்தை காப்பாற்றாமல், பாஜகவின் அடிவருடியாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. அந்தப் பதவிக்கே அவர் தகுதி இல்லாதவர்” - டி.கே.எஸ்.இளங்கோவன்
--
“ஆளுநருக்கு அந்த அதிகாரம் கிடையாது, இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.