உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிரிப்பது ஆரிய மாடல். முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு. வீடியோ வைரல்.
திராவிட இயக்கத்தின் முழுமுதற்கொள்கையான சமூகநீதியின் அடிப்படை என்பதே கல்விதான். அனைவரும் படிக்க வேண்டும், அனைவரும் வேலைவாய்ப்பு பெற வேண்டும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.
படிப்புக்கு எத்தகைய தடைக்கல்லும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம்; திராவிட மாடல் அரசு கல்விக் கண்ணை திறப்பதையே பெரும் பணியாக கொண்டு செயல்படுகிறது.
சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைதான் இன்று நாட்டிற்கு அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுகிறது.
நான் சொல்லி செய்கிறவன் அல்ல, சொல்லாததை செய்பவன்; கலைஞரின் முழக்கம் என்பது ‘சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்’; எனது பாணி என்பது ‘சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம்
மக்களின் அனைத்து அன்றாடத் தேவைகளை பார்த்துப் பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. எனவே மாநில அரசுகளை தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால் தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும்.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் இருக்கும் இயக்கம்தான் திமுக. அந்த அடிப்படையில் தான் ஆட்சியும் நடக்கிறது.
போரில் யானையும் உண்டு, குதிரையும் உண்டு. கோட்டையும் உண்டு, வீரர்களும் உண்டு. அரசனும் உண்டு, அரசியும் உண்டு. போர் மரபுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதை கீழடி நமக்குச் சொல்கிறது.
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Video: